HTML - Text(உரை): Heading(தலைப்பு)

கடந்த HTML தொடரில் HTML இற்கு அவசியமான குறிகள்(Tags) பற்றிப் பார்த்திருந்தோம் (முன்னைய பதிவுக்கு).

இந்த பதிவில் இணையப்பக்கம் ஒன்றுக்கு உரை சேர்க்கும் போது குறிகள்(tags) எவ்வாறு அமையும் என பார்ப்போம்.

தலைப்பு(heading)

எமது இணைய பக்கத்தில் நாம் தலைப்பொன்று இடவேண்டும் எனில்;

போன்ற குறிகளில்(tags) எழுதப்படும்.

தலைப்பின் tags ஆனது
தொடக்கம்
வரை எழுத்துக்களின் அளவுக்கு(Size) ஏற்ப எழுதப்படும். முறையே
இலிருந்து
வரை எழுத்துக்களின் அளவு குறைந்து செல்லும்.

மேலே நாம் பார்த்த Tags'களை உபயோகித்து எமது முதலாவது இணையப்பக்கத்தை எவ்வாறு உருவாக்கலாம் என பார்ப்போம். எமது HTML அறிமுகம் பதிவில் நாம் கூறியது போல் நாம் Notepad இனை பயன்படுத்தி எழுதலாம்.

Windows 7 இற்கு முந்திய Windows OS' களில்;

Open Start > Programs > Accessories > Notepad

Windows 8 இற்கு பிறகான Windows OS' களில்;

Open Start > Type "Notepad"

Open-Notepad

HTML-Notepad

இந்த ஒழுங்கில் type செய்த பின்னர். File'இனை Save செய்ய வேண்டும்

Save செய்ய;

File>Save அல்லது Ctrl + S' இனை அழுத்துவதன் மூலம் "Save As" Menu தோன்றும்.

Save

Save As Menu'ல்:

மேலே 1'ல் காட்டியவாறு உங்கள் கணனியில் ஏதாவது ஒரு இடத்தை (Desktop/document/local drive/folder/..etc) Select செய்து,

2 Save as type என்ற இடத்தில் All Files'ஐ Select செய்து,

3 File Name என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தவாறு கோப்பின்(file) பெயரை Type செய்து, அதனை தொடர்ந்து .htm அல்லது .html இரண்டில் ஏதாவது ஒரு கோப்பு நீட்சி(file extension)'ஐ Type செய்து,

(.htm அல்லது .html இரண்டும் ஒரே file extension'யே குறிக்கின்றது அவற்றில் எவ்வித வேற்றுமைகளும் இல்லை).

4 Encoding என்ற இடத்தில் UTF-8'ஐ Select செய்து,

5 இறுதியாக Save பட்டனை அழுத்துக.

நாம் 1'ல் Save செய்திருந்த Location'இற்கு சென்று;

File Saved-Location

File'ஐ Open செய்தால் கீழே உள்ளவாறு உலாவியில்(Browser) காட்சியளிக்கும்.

Browser

இனி
தொடக்கம்
வரை உள்ள அனைத்து குறிகளையும்(tags) ஒரே பக்கத்தில் type செய்து அதற்கிடையிலான வித்தியாசத்தை அவதானிக்காலம்.

HTML-Notepad

இதனை ஏற்கனவே பார்த்தவாறு Save செய்து, Browser இல் Open செய்வதன் மூலம் பின்வருமாறு காட்சியளிக்கும்.

Browser

தொடக்கம்
வரையான குறிகள் பற்றி இன்றைய பதிவில் பார்த்தோம்  அடுத்த பதிப்பில் பந்தி(/பத்தி) அமைப்புகளில்(paragraph) எவ்வாறு எழுதலாம் என பர்க்கலாம்.

தொடரும்...

கருத்துகள் இல்லை