Adobe Flash Player E.O.L - Time to uninstall Flash Player
What is Adobe Flash Player
Adobe Flash Player ஆனது எமது Browser மற்றும் Apps களில் Video, Audio மற்றும் Games போன்றவற்றை எமக்கு காட்சிப்படுத்த உபயோகிக்கப்படுவதாகும்.
Adobe Flash Player E.O.L (End of Life)
Adobe இன் 2017 அறிக்கையின் படி 2020 டிசம்பர் உடன் Adobe Flash Player 'இன் ஆயுளினை முடித்துக்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தது, அதன் படி பார்க்கும் போது அது இறுதி காலத்தை நெருங்க இன்னும் சில மாதங்கள் மாத்திரமே இருக்கின்றது.
மேலும் அந்த அறிக்கையில் Flash Player இன் Security patch updates & Support இனை பயனாளர்கள் வருட இறுதிவரை மாத்திரம் பெற முடியும் எனவும், அதன் பின்னர் எவ்வித Update & Support உம் கிடைக்க பெறாது எனவும், அதன் இணையப்பக்கத்தில் இருந்து Flash player இனை Download பண்ணும் பக்கங்களை நீக்கி விட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Adobe Flash Player'இனை பயனாளர்கள் தமது கணனியில் அல்லது Browser Plug-in ஆக நிறுவி(Installed) இருந்தால் அதனை வருட இறுதிக்கு முன்னதாக அழித்து(Uninstall) விடவும் பரிந்துரை செய்து உள்ளது.
3rd Party இணையப்பக்கங்களிலும் இதனை Download செய்ய வேண்டாம் எனவும் Malware மற்றும் Virus போன்றவற்றுக்கு இதுவே முக்கிய காரணமாக இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் HTML-5 ஆனது Flash Player இனை விட சிறந்து விளங்குவதுடன் பாதுகாப்பனதும் கூட.
Adobe Flash Player இனை அடிப்படையாக வைத்திருக்கும் பல இணையத்தளங்கள் மற்றும் Operating System'கள் தற்போது HTML-5 இற்கு மாறிக்கொண்டு இருப்பதை அவதானிக்கலாம். இருப்பினும் ஒரு சில இணையத்தளங்கள் இன்னும் Flash Player இனை பாவிப்பது அதன் பாவனையாளர்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையலாம்.
Apple நிறுவனமானது தமது Apple Device 'களில் Flash இல் இருக்கும் ஒரு சில பாதுகாப்பு ஓட்டைகளை காரணங்களில் ஒன்றாக காட்டியே இனி Flash Player செயற்படாது(Support) என அறிவித்து இருந்தது.
நம் எல்லோருக்கும் தெரிந்த YouTube வீடியோக்கள் Flash Player இனையே அடிப்படையாக வைத்திருந்தது. தற்போது அதுவும் HTML-5 இற்கு மாறி சிறப்பாக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் Flash Player இன் ஆயுள் இந்த வருடத்துடன் முடிவடைகின்றது.
கருத்துகள் இல்லை