HTML-Tags(குறிகள்) & Structure(கட்டமைப்பு)

இதற்கு முன்னைய பதிவில் HTML அறிமுகம் மற்றும் அது தொடர்பான ஒரு சில அடிப்படை விடயங்களை பார்த்திருந்தோம்(முன்னைய பதிவுக்கு). அதன் தொடர்ச்சியாக, குறிகள் பற்றிப் பார்க்கலாம்.
HTML-Tags(குறிகள்)
HTML-குறிகள் "< >" போன்ற கோண அடைப்புக்களில்(Angle brackets) காணப்படும். பொதுவாக குறிகள் இரண்டு வகைகளாக காணப்படும்.
- ஒரு சோடி குறிச்சொற்கள்: இது ஆரம்ப குறி(Starting/opening tag) <tag> மற்றும் முடிவுக்குறி(Closing/ends tag) </tag> யினைக்கொண்டு காணப்படும். முடிவுக்குறி ஆனது "/" என்ற அடையாளத்துடன் சேர்த்து ஏழுதப்படும். ஆரம்ப குறிச்சொல்லில் சில பண்புகளும்(Attributes) உள்ளடக்கப்படலாம்.<tag>Content </tag>ஒரு HTML உறுப்பு(element) ஆரம்பிக்கும் போது< tag> இவ்வாறும் முடிவடையும் போது </tag>இவ்வாறாகவும் எழுதப்பட வேண்டும்.<tag attribute="value" attribute="Value">Content</tag>
- ஒரு சில குறிகளில் ஆரம்பகுறி(Start tag) <tag>மாத்திரம் காணப்படும்.
![]() |
HTML-Element |
அனைத்து HTML பக்கங்களுக்கும் பொதுவான மற்றும் அவசியமான Tags பற்றிப்பார்ப்போம்.
-
<!DOCTYPE html>
ஆவண வகை- இது HTML-5'ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையப்பக்கமானது HTML-5'ல் எழுதப்பட்டுள்ளது என உலாவிக்கு(Browser) தெரியப்படுதுவதற்காக இது பயன்படும்.
<html>
</html>
தொடக்க உறுப்பு-இது HTML பக்கங்களை விளக்கும் போது ஆரம்பத்தில் <html> உம் இறுதியில்</html> உம் சேர்க்கப்படும்.(இது நாம் மேலே பார்த்த Tags-வகைகளில் ஒரு சோடி குறிச்சொற்களுக்கு உதராணமாகும்).
<head>
</head>
தலை-HTML பக்கங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கும்.(இது நாம் மேலே பார்த்த Tags-வகைகளில் ஒரு சோடி குறிச்சொற்களுக்கு உதராணமாகும்).
-
<title>
</title>
தலைப்பு-மேலே நாம் பார்த்த <head> உடன் தொடர்ந்து வரும். இதில் வழங்கப்படும் பெயர், உலாவியின்(Browser) தலைப்பாய் அமையும்.(இது நாம் மேலே பார்த்த Tags-வகைகளில் ஒரு சோடி குறிச்சொற்களுக்கு உதராணமாகும்).<head><title>Website Title</title></head>
-
<body>
</body>
உடல்-நாம் இணையப்பக்கங்களில் பார்க்கக்கூடிய தலைப்புகள், எழுத்துக்கள், வரைபடங்கள், அட்டவணைகள், படிவங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள்... என இணையப்பக்கங்களில் நாம் பார்க்ககூடிய அனைத்து விடயங்களும் இதனுள் எழுதப்படும்.(இது நாம் மேலே பார்த்த Tags-வகைகளில் ஒரு சோடி குறிச்சொற்களுக்கு உதராணமாகும்).
HTML பக்கங்களின் கட்டமைப்பானது பின்வரும் ஒழுங்கில் அமையவேண்டும்.
![]() |
HTML Structure |
தொடரும்...
கருத்துகள் இல்லை