HTML-Introduction(அறிமுகம்)



HTML (எச்.ரி.எம்.எல்) அறிமுகம்

HTML(Hyper Text Markup Language-மீ உரை சுட்டு மொழி) ஆனது இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு அவசியமானதொரு குறியீட்டு மொழி ஆகும்.

குறிப்பு: HTML ஆனது ஒரு நிரல்மொழி(Programming Language) அல்ல, அது ஒரு குறியீட்டு மொழியாகும்(Markup Language).

இதனை எமது தளத்தில் மிக இலகுவாகவும் ஆழமாகவும் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாக இணையப்பக்கங்களை மெருகூட்டும் CSS(விழுத்தொடர் பாணித் தாள்கள்) மற்றும் JavaScript போன்றவற்றையும் முழுமையாக கற்கலாம்.

இவற்றை முறையாக கற்பதன் மூலம் நீங்களாகவே இணையத்தளப்பக்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். 


மேலும் இங்கு கூறப்படும் அனைத்து HTML தொடர்களும் புதிய HTML-5'ஐ அடிப்படையாக கொண்டுள்ளது.


ஒரு சில அடிப்படை விடயங்களை பார்க்கலாம்... 


இணைய உலாவி(Internet Browser)

இன்று நமது இணைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இதனை உபயோகிக்கின்றோம். இதன் பயன்பாடானது HTML-குறியீட்டு மொழியைப் புரிந்து இணையப்பக்கங்களை பயனாளர்களுக்கு காட்சிப்படுத்துவதாகும்.
ஒரு சில உலாவிகளின் பெயர்கள்: Google Chrome, Safari, Edge, Firefox.

இணைய உலாவி ஒன்றின்னூடாக இணையப்பக்கங்களை(Websites) பயனாளர்கள்(Users) பார்வையிடும் போது குறியீட்டு மொழியின் குறிகள் தென்படாது.

சொல் தொகுப்பி(Text Editor)

Text Editor' ஆனது இணையத்தளப்பக்கங்களை உருவாக்கவும் மற்றும்
அதனை விருத்தி செய்யவும் பயன்படும். இன்று பல Text Editor'கள் காணப்படுகின்றன.
  • Notepad(Windows)
  • Notepad++
  • Netbeans
  • SublimeText
  • Visual Studio Code;
        போன்ற Editor'களுடன் மேலும் பல காணப்படுகின்றன.

நாம் இங்கு Windows' கணனிகளில் காணப்படும் சாதாரண Text editor ஆன Notepad'இனை பாவித்து HTML'இனை கற்கப்போகின்றோம்.

Notepad Window

HTML'இனை கற்கும் போது ஆரம்பத்தில் Notepad போன்றதொரு சாதாரண Text editor'இல் கற்பதே சிறந்தது.


தொடரும்...

கருத்துகள் இல்லை