HTML 5 in Tamil - Text: Formatting

கடந்த HTML Tutorial பதிவில் Line Break மற்றும் Horizontal Rules இன் குறிகள் பற்றி பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் HTML இல் காணப்படும்  Formatting பற்றிப் பார்க்கலாம்.

HTML Formatting

Bold-Text

HTML இல் எழுத்துக்களை Bold பண்ண வேண்டும் என்றால் Bold பண்ண வேண்டிய எழுத்துக்களின் முன்னும் பின்னுமாக முறையே    ,   குறியினை இடவேண்டும்.

HTML இனை பொறுத்தமட்டில் Bold ஆனது Text இனை அழகுபடுத்த மாத்திரம் பயன்படும் ஒரு குறியாகும்.

உதாரணமாக:

கீழுள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இனில் எழுதினால்;

Bold only makestext visually bold

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது பின்வருமாறு காட்சியளிக்கும்.

Bold only makes text visually bold

Strong-Text

HTML இல் ஒரு text இனை முக்கியமானதாக காட்ட இது பயன்படும்.

ஒரு முக்கியமான text  இன் முன்னும் பின்னுமாக    ,    குறியீடுகளை எழுதுவதன் மூலம் காட்சிப்படுத்தலாம்.

இதன் output ஆனது Bold போன்றே காட்சி அளிக்கும், இருப்பினும் இக்குறிகள் பாவிக்கப்படும் நோக்கங்கள் வேறு.

உதாரணமாக:

கீழுள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இல் எழுதும் போது;

Attention!Don't visit to unsafe site

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது கீழ்வருமாறு காட்சியளிக்கும்.

Attention! Don't visit to unsafe site

Italic-Text

Text இனை italic ஆக காட்டுவதற்கு பயன்படும்.

italic இல் எழுத வேண்டிய எழுத்துக்களின் முன்பாகவும் பின்பாகவும்  முறையே   , என்ற குறியீடுகளை உபயோகித்து  எழுதப்படும்.

பொதுவாக italic ஆனது நமது சிந்தனைகள் அல்லது கருத்துக்கள், தொழில்நுட்பம் சார்ந்த சொற்பிரயோகங்கள், வேற்று மொழி சொற்தொடர்கள், போன்ற இடங்களில் italic ஆக எழுதுவது வழமை.

உதாரணமாக:

கீழுள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இல் எழுதினால்;

A foreign word, Bonjour, means Hello in French

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது கீழுள்ளவாறு காட்சியளிக்கும்.

A foreign word, Bonjour, means Hello in French

Emphasized-Text

வாசிக்கும் போது சொற்தொடர்களை அழுத்தி வாசிப்பதற்கு Emphasize  Text இனை உபயோகிக்கலாம்.

சொற்களின் முன்னும் பின்னுமாக முறையே  ,  என்ற குறியீடுகளை உபயோகித்து எழுதப்படும்.

இதனுடைய Output, italic போன்றே காட்சியளிக்கும், இருப்பினும் பிரயோகிப்படும் நோக்கம் வேறாக காணப்படும்.

உதாரணமாக:

I am really tired

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது பின்வருமாறு காட்சியளிக்கும்.

I am really tired

Smaller-Text

Text இன் Size இனை சிறிதாக காட்டுவதற்கு  Smaller Text இனை உபயோகிக்கலாம்.

சிறிதாக காட்டவேண்டிய சொற்களின் முன்னும் பின்னுமாக முறையே  ,  என்ற குறியீடுகளை உபயோகித்து எழுதப்படும்.

உதாரணமாக:

கீழ் உள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இனில் எழுதினால்;

This text is "smaller" text

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது கீழ் உள்ளவாறு காட்சியளிக்கும்.

This text is "smaller" text

Underline-Text

சொற்களின் கீழ் அடிக்கோடிட்டு காட்டுவதற்கு underline-Text இனை உபயோகிக்கலாம்.

அடிக்கோடு இட வேண்டிய சொல்லின் முன்னும் பின்னுமாக முறையே   ,  என்ற குறிகளை உபயோகித்து எழுத வேண்டும்.

உதாரணமாக:

கீழ் உள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இனில் எழுதினால்;

I like The Tamil Techholic website.

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது பின்வருமாறு காட்சியளிக்கும்.

I like The Tamil Techholic website.

(HTML இல் underline Tags பாவிப்பது குறைவு. அதற்கான காரணம் பற்றி பிறகு பார்க்கலாம்.)

Subscripted-Text

இது தமிழில் கீழ் ஒட்டு/அடியெழுத்து எனப்படும்.

அடியெழுத்தாக வரவேண்டிய எழுத்தின் முன்னும் பின்னுமாக முறையே  ,  என எழுதப்படும்.

உதாரணமாக:

கீழ் உள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இனில் எழுதினால்;

H2O is the chemical formula for water.

அதன் output இனை Browser இல் பார்க்கும் போது பின்வருமாறு காட்சியளிக்கும்.

H2O is the chemical formula for water.

Superscripted-Text

இது தமிழில் மேல் ஒட்டு எனப்படும்.

மேலொட்டாக வரவேண்டிய எழுத்தின் முன்னும் பின்னுமாக முறையே  ,  என எழுதப்படும்.

உதாரணமாக:

கீழுள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இல் எழுதினால்;

(x+y)2=x2+2xy+y2

(x+y)2=x2+2xy+y2

Marked (Highlighted)-Text

எழுத்துக்களை highlight பண்ணி காட்டுவதற்கு இது பயன்படும்.

அடிக்கோடு இட வேண்டிய சொல்லின் முன்னும் பின்னுமாக முறையே  ,  என்ற குறிகளை உபயோகித்து எழுதப்படும்.

உதாரணமாக:

கீழ் உள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இல் எழுதினால்;

Don't forget to Subscribe Tamil Techholic Youtube Channel

Don't forget to Subscribe Tamil Techholic Youtube Channel

Striked/Deleted-Text

எழுத்துக்களுக்கு குறுக்குக் கோடிட்டு காட்டுவதற்கு இது பயன்படும்.

குறுக்குக் கோடிட வேண்டிய சொல்லின் முன்னும் பின்னுமாக முறையே  ,  அல்லது  ,   என்ற குறிகளை உபயோகித்து எழுதப்படும்.

உதாரணமாக:

கீழ் உள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இனில் எழுதினால்;

This Document is updated on 2019 2020.

This Document is updated on 2019 2020.

This Document is updated on 2019 2020.

This Document is updated on 2019 2020.

Inserted-Text

புதிதாக இணைக்கப்பட்டுள்ள  எழுத்துக்களை காட்டுவதற்கு இது பயன்படும்.

புதிதாக இணைக்க  வேண்டிய சொல்லின் முன்னும் பின்னுமாக முறையே  ,  என்ற குறிகளை பயன்படுத்தி எழுதப்படும்.

இது Underline text போன்றே browser இல் காட்சியளிக்கும், இருப்பினும் பயன்படுத்தப்படும் நோக்கங்கள் வேறாகும்.

உதாரணமாக:

கீழ் உள்ளவாறு HTML Editor (Eg. Notepad) இல் எழுதும் போது;

This Document is updated on 2019 2020.

This Document is updated on 2019 2020.

இன்றைய பதிவில்,

Bold Text

Strong Text

Italic Text

Emphasized Text

Smaller Text

Underlined Text

Subscripted Text

Superscripted Text

Marked (/ Highlighted) Text

Striked/ Deleted Text

or

Inserted Text

மேலுள்ளவற்றை விரிவாக பார்த்திருந்தோம் இதன் தொடர்ச்சியாக  அடுத்த பதிவில் Quotation மற்றும் Citation பற்றிப் பார்க்கலாம்.

தொடரும் ...

கருத்துகள் இல்லை