Windows'ற்கான சிறந்த Cleaner Software'ஐ தேடுகிறீர்களா?

 


உங்கள் கணனி வேகம் குறைவாக உள்ள காரணத்தால் தேவை இல்லாத கோப்புகளை அழிக்க சிறந்த விண்டோவ்ஸ்(Microsoft Windows Operating System) 'ற்கான சிறந்த கிளீனர் சொப்ட்வேர்  ஒ‌ன்றை தேடி அலைந்து திரிவீர்களாயின் உங்களுக்கான சிறந்த பதிவு இதுவே.

அதற்கு முன்னர் ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது;

கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?

 "இதன் பொருள் புரிந்திருக்கும் என நம்புகிறேன், ஆமாங்க உங்க விண்டோவ்ஸ்ல ஏற்கனவே கிளீனர் சொப்ட்வேர் எல்லாம் இருக்கு, பிறகு எதற்க்கு வேறாக தரவிறக்கம்(Download) செய்து இன்ஸ்டால் பண்ணவேணும்?..."

விண்டோவ்ஸ் இனை பொறுத்தமட்டில் ஏற்கனவே அதன் கூடவே  இருக்கக்கூடிய மென்பொருள்(Built-in Software);

  • Storage Sense
  • Disk Cleanup
இதில் "Storage Sense" ஆனது Windows 10'இல் காணப்படக்கூடியது, 
Windows 10 பாவனையாளர்களுக்கு இதை விட சிறந்த மற்றும் பாதுகாப்பான மென்பொருள் இருக்குமா என்பது ஐயம்.

Storage Sense

இது Settings > System > Storage இல்  Configure Storage Sense or run it now' என்ற Option'ஐ கிளிக் செய்வதன் மூலம் வரும் Settings'ல் "Temporary Files" & "Free up space now" போன்ற Options'களை  நமக்கு ஏற்றால் போல் மாற்றி அமைத்து "Clean now" பட்டனை கிளிக் செய்வதன் மூலம் Clean பண்ணிக்கொள்ளலாம்.
 
அடுத்த விண்டோஸ் இல் காணப்படும் மென்பொருளான (Built-in Software) ஆன "Disk Cleanup" இது Windows 7/8/10'ல்  காணப்படும்.

Disk Cleanup


விண்டோஸ் இருப்பது திருப்தி இல்லை இதைவிட வேறு ஏதாவது இலவச கிளீனர் சொப்ட்வேர் தேவை என்றால், இன்று அதிகமாக பயன்படுத்தும்,
மேல் உள்ள இரண்டும் தற்போது அதிகமானவர்களால் பாவிக்கபட்டுவரும் சொப்ட்வேர் ஆகும்.   
இவை இரண்டும் குறிப்பிட்ட சேவைகளை மாத்திரம் இலவசமாக வழங்கிய போதிலும் நமக்கு தேவையான Cleaner Software'இன் செயற்பாடுகளை இலவசமாக செய்துகொள்ளலாம். 

கருத்துகள் இல்லை